உள்ளூர் செய்திகள்

நல்லி இல்லாததால் குடிநீர் விணாக செல்லும் காட்சி.

டவுன் கல்லணை பள்ளி எதிரே வீணாக சாக்கடையில் கலக்கும் குடிநீர்

Published On 2023-01-05 09:00 GMT   |   Update On 2023-01-05 09:00 GMT
  • நெல்லை டவுண் தெற்கு மவுண்ட் ரோடு நெல்லை மாநகராட்சி( கல்லணை) மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு எதிரே பொது குடிநீர் குழாய் உள்ளது.
  • இந்த குழாய்க்கு அடைப்பு, திறப்பு நல்லி இல்லாததன் காரணமாக சில மாதங்களாக குடிநீர் வீணாகி கழிவு நீரோடைக்கு செல்கிறது.

நெல்லை:

நெல்லை மாவட்ட பொதுஜன பொது நலச் சங்க தலைவர் முகமது அய்யூப் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

நெல்லை டவுண் தெற்கு மவுண்ட் ரோடு நெல்லை மாநகராட்சி( கல்லணை) மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு எதிரே பொது குடிநீர் குழாய் உள்ளது. இந்த குழாய்க்கு அடைப்பு, திறப்பு நல்லி இல்லாததன் காரணமாக சில மாதங்களாக குடிநீர் வீணாகி கழிவு நீரோடைக்கு செல்கிறது.

மேலும் குடிநீர் குழாய் கழிவு நீரோடையை நோக்கி இருப்பதால் குடிநீர் தேவைக்கு பயன்படுத்த நினைப்பவர்களுக்கு அதாவது குடிநீர் குடிப்பதற்காக குடம் கொண்டு வருபவர்களுக்கு பெரிதும் சிரமமாக உள்ளது.

இந்த குடிநீர் அருகிலுள்ள வீடுகளிலுள்ளவர்களுக்கும், சாலையில் செல்பவர்களுக்கும் குறிப்பாக கல்லணை பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கும் மிகவும் உதவியாக இருந்து வருகிறது. எனவே இந்த குடிநீர் குழாய்க்கு உடனடியாக நல்லி இணைப்பை ஏற்படுத்துவதுடன், குடிநீரை சிரமமில்லாமல் பிடிப்பதற்கு கழிவு நீரோடை பக்கமாக இருப்பதை சாலையின் பக்கமாக திருப்பி வைத்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News