உள்ளூர் செய்திகள்
விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டிருந்த பலாப்பழம்.
தருமபுரியில் பலாப்பழம் விற்பனை அமோகம்
- விலை குறைவாக இருப்பதுடன் சுவையும் நன்றாக இருப்பதால் பொதுமக்களும் பலாவை ஆர்வமாக வாங்கி சென்றனர்.
- சாலையோரங்களில் கடைகளில் பலாப்பழம் வியாபாரம்.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூர் சாலையோரங்களிலும், தற்போது பலாப்பழ சீசன் என்பதால் பண்ருட்டி, ஜவ்வாதுமலை, ஏலகிரி ஆகிய பகுதிகளில் மொத்தமாக வாங்கி வந்து பழத்தை குவித்து வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
ஒரு கிலோ ரூ.30 ருபாய் முதல் வரை விற்பனை செய்யப்பட்டது. விலை குறைவாக இருப்பதுடன் சுவையும் நன்றாக இருப்பதால் பொதுமக்களும் பலாவை ஆர்வமாக வாங்கி சென்றனர்.
தருமபுரி நகரிலும் சாலையோரங்களில் கடைகள் அமைத்து பலாப்பழம் வியாபாரம் செய்து வருகின்றனர். விலையும் குறைவு என்பதால் மக்கள் வாங்கி கொண்டு வீட்டில் குடும்பத்துடன் சாப்பிட்டனர்.