உள்ளூர் செய்திகள்

மாரண்டஅள்ளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது

தருமபுரி, கிருஷ்ணகிரி அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

Published On 2022-07-10 13:57 IST   |   Update On 2022-07-10 13:57:00 IST
  • குழந்தைகளின் ஒழுக்கத்தை பற்றியும் பள்ளியின் வளர்ச்சி பற்றியும் பள்ளியில் இடையில் நின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க முன்வர வேண்டும்.
  • உறுப்பினர்கள் மொத்தம் 20 பேர் இவர்கள் மணிமேகலையை தலைவராகவும், ராஜேஸ்வரி துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுத்தனர்.

தருமபுரி.

தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த பெரும்பாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாணவ, மாணவியர் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

இதில் குழந்தைகளின் ஒழுக்கத்தை பற்றியும் பள்ளியின் வளர்ச்சி பற்றியும் பள்ளியில் இடையில் நின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க முன்வர வேண்டும் எனவும், பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை பள்ளிக்குச் செல்லும் பொழுது அறிவுரை வழங்க வேண்டும் என பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.

இதில் உறுப்பினர்கள் மொத்தம் 20 பேர் இவர்கள் மணிமேகலையை தலைவராகவும், ராஜேஸ்வரி துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுத்தனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் ஆசிரியர்கள் உட்பட அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மனோகரன், வட்டார கல்வி அலுவலர் மணிகிருஷ்ணன், முன்னாள் மேலாண்மை குழு தலைவர் ஆசிரியர் ஸ்ரீராமுலு, பஞ்சாயத்து தலைவர் கஸ்தூரி சரவணன், உதவி தலைமை ஆசிரியர் சதாசிவம், ஆசிரியர் சிவகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பென்னாகரம்

பென்னாகரத்தை அடுத்த குள்ளனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.

பல்வேறு அறிவுரைகளை பள்ளி மேலான்மை குழுவின் மாவட்ட கருத்தாளர் சுரேஷ் வழங்கினர். இதில் உறுப்பினர்கள் மொத்தம் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் ஒரு மனதாக எஸ். இளவரசி தலைவராகவும் திலகவதி துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுத்தனர். தேர்ந்தெ டுக்கப்பட்ட அனைவரும் ஆசிரியர்கள் உட்பட அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் த.சிங்கார வேலன், பஞ்சாயத்து துனை தலைவர் கந்தர் ஆசிரியர்கள் அன்னபூரணி வளர்மதி லோகநாதன் சிவக்குமார் மணிவண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வேப்பனப்பள்ளி

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேலாண்மை குழு மறுகூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பள்ளி மேலான்மைகுழு தலைவர்கள் செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளியில் படிக்கும் மாணவி களின் பெற்றோர்கள் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் பள்ளிக்கு புதிய கட்டிடங்கள், மேசைகள், பள்ளி தேவையான உபக ரணங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மத்தூர்

மத்தூர் அருகே உள்ள களர்பதி அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். பள்ளியின் தலைமையாசிரியர் நெப்போலியன் அனை வரையும் வரவேற்று சிறப்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளாராக களர்பதி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி கலந்துகொண்டார்.

இதனை தொடர்ந்து பள்ளியின் மேலாண்மைத் தலைவராக எஸ்.மகேஸ்வரி சீனிவாசன், துணைத் தலைவராக பூங்கொடி மாதப்பன் ஆகியோரை பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் ஒப்புதலோடு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இத்துடன் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தமிழ்செல்வி கருணாநிதி, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோவிந்தராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் மகேஸ்வரி மாதப்பன் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் மாது, ஒன்றிய மீனவரணி செயலாளர் எம்.ஆர்.முனுசாமி பள்ளியின் பொருளாளர் பூபதி, மலையாண்டஅள்ளி வேடி, மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் உள்ளிடோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

மாரண்டஅள்ளி

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பெற்றோர்கள் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தங்க சரவணன் மற்றும் மாரண்டஅள்ளி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தம்மாள் முன்னிலையில் மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யும் கூட்டம் நடைபெற்றது.

இதில் தலைவர் பரிமளா துணைத் தலைவர் செந்தில்குமார் உள்பட 20 பேர் கொண்ட உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மற்றும் இதில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Tags:    

Similar News