உள்ளூர் செய்திகள்
தருமபுரி மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்திற்கு உட்பட்ட கோவில்களில் தூய்மை செய்யும் பணி
- இந்து சமய அறநிலையத்திற்கு உட்பட்ட கோவில்களில் தூய்மை செய்யும் பணி நடந்து வருகிறது.
- வெங்கட்ரமண சுவாமிபெருமாள் ஆகிய கோவிலில் நேற்று தூய்மை செய்யும் பணி நடந்தது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்திற்கு உட்பட்ட கோவில்களில் தூய்மை செய்யும் பணி நடந்து வருகிறது. இந்து சமய அறநிலைத்துறை தருமபுரி உதவி கமிஷனர் உதயகுமார் தலைமையில் தருமபுரி அருகே உள்ள அக்கமநல்லி, மூக்கனூர், ஸ்ரீ ஆதிமூலம் வெங்கட்ரமண சுவாமிபெருமாள் ஆகிய கோவிலில் நேற்று தூய்மை செய்யும் பணி நடந்தது.
இதில் கோவில் பிரகாரங்கள், மதில் சுவர்கள், அன்னதான கூடம், கோபுரங்கள், மடப்பள்ளி அலுவலகங்கள், மற்றும் சன்னதிகள் ஆகியவற்றில் தூய்மைப் பணி நடந்தது. இந்த பணிகளில் ஆய்வர் சங்கர், கோவில் பணியாளர்கள் , தூய்மை பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பலர் ஈடுபட்டனர்.