உள்ளூர் செய்திகள்

கோவையில் மானியத் திட்டத்தில் ரூ.750-க்கு 10 மூலிகை செடிகள் அடங்கிய மூலிகை தொகுப்பு

Published On 2023-01-21 14:59 IST   |   Update On 2023-01-21 14:59:00 IST
  • முன்னுரிமை அடிப்ப டையில் பயனாளிகள் தோ்வு செய்யப்படுவா்.
  • பயிற்சி கையேடு ஆகியவை மூலிகை தொகுப்பில் அடங்கியிருக்கும்.

கோவை,

தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் மூலிகை செடிகள் வளா்ப்பை ஊக்குவிக்கும் விதமாக பொதுமக்களுக்கு மானிய விலையில் மூலிகை செடிகள் தொகுப்பு வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ரூ.1,500 மதிப்புள்ள 10 மூலிகை செடிகள் அடங்கிய தொகுப்பு 50 சதவீத மானியத்தில் ரூ.750-க்கு வழங்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் இணையதளத்தில் பதிவு செய்து அருகிலுள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம்.

இதுகுறித்து தோட்ட க்கலைத் துறை துணை இயக்குனர் புவனே ஸ்வரி கூறியதாவது-மூலிகை தொகுப்பு திட்டத்தில் ஆடாதொடா, தூதுவளை, அஸ்வகந்தா, வல்லாரை, இன்சுலின், கற்பூரவல்லி, வசம்பு, பிரண்டை, துளசி மற்றும் ஜிம்னிமா ஆகிய 10 வகையான மூலிகை செடிகள் தலா 2 செடிகள் வீதம் 20 செடிகள் வழங்கப்படும். தவிர செடிகள் வளா்ப்பதற்கு 10 வளா்ப்பு பைகள், 20 கிலோ காயா் பித், 4 கிலோ மண்புழு உரம் மற்றும் பயிற்சி கையேடு ஆகியவை மூலிகை தொகுப்பில் அடங்கியிருக்கும்.

எனவே, கோவை மாவட்ட த்தில் மூலிகைத் தொகுப்பு பெற விரும்புபவா்கள் இணையதளத்தில் பதிவு செய்து அருகிலுள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் பெற்றுகொள்ளலாம்.

மாவட்டத்துக்கு 500 மூலிகை தொகுப்புகள் மட்டுமே இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதால் முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை அடிப்ப டையில் பயனாளிகள் தோ்வு செய்யப்படுவா்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News