உள்ளூர் செய்திகள்

சூளகிரி ஒன்றிய பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு

Published On 2022-10-28 15:06 IST   |   Update On 2022-10-28 15:06:00 IST
  • அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலர் வருகை தந்து ஆய்வு செய்தனர்.
  • உணவை மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி பியூலாராஜேஸ் வழங்கினார்.

சூளகிரி.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் மேலுமலை ஊராட்சியை சேர்ந்த பிக்கனப்பள்ளி கிராமத்தில் அரசு ஆரம்ப பள்ளியை ஐ.ஏ.எஸ். அதிகாரி பியூலாராஜேஸ் மற்றும் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, மற்றும் ஒசூர் சார் ஆட்சியர் சரண்யா, மாவட்ட சுகாதார ஆய்வாளர் பிரகாஷ், சூளகிரி தாசில்தார் அணிதா, வட்டார மருத்துவர் வெண்ணிலா, பி.டி.ஒ.க்கள் கோபாலகிருஷ்ணன், சிவகுமார் மற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலர் வருகை தந்து ஆய்வு செய்தனர்.

பிக்கனப்பள்ளி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு முதல் -அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் சார்பில் மாணவர்களுக்கு வழங்கும் உணவை மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி பியூலாராஜேஸ் வழங்கினார்.

பின்னர் இம்மிடி நாயக்கனப்பள்ளி ஊராட்சி யில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் காலை உணவு வழங்குவதை பார்த்து சுத்தம், சுகாதாரமாக வழங்கப்படுகிறது என பாராட்டினார். அந்தப் பள்ளி மாணவர்களிடம் உணவு எப்படியிருக்கிறது என கேட்டார். அனைத்து மாணவர்களும் நன்றாக இருக்கிறது என கூறினர்.

பின்னர் அப்பகுதியில் உள்ள ஒருவரது வீட்டுக்கு சென்று மக்களை தேடி மருத்துவம் சார்பில் நோய்க்கு மருந்து பெற்று சாப்பிட்டு வருவதை கண்டு எப்படி செயல்படுகிறது என விசாரித்தார்.

Tags:    

Similar News