சூளகிரியில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
சூளகிரியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தடுப்பு சுவரை அமைக்க வேண்டும்
- பல்வேறு வங்கிகள் இருப்பதால் நாள் ஒன்றுக்கு பல ஆயிரம் மக்கள் பேருந்துகளில் மக்கள் பயணித்து வருகிறார்கள்.
- வாகனங்கள் அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா வளர்ந்துவரும் நகரமாகும். சூளகிரி ஊராட்சி தலைமை ஊராட்சியாகவும் சூளகிரி தாலுகா, சூளகிரி ஒன்றியம் என பெயர்கள் இருந்தாலும் சூளகிரி ஊராட்சியில் போதிய அளவு வசதிகள் இல்லை.
இந்த ஊராட்சியில்தான் கடை வீதிகள், வணிக வளாகங்கள், சூளகிரி ஊராட்சி மன்றம், வட்டார வளர்ச்சி அலுவலகம், வட்டார மருத்துவமனை, பத்திரபதிவு அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம், வருவாய் அலுவலகம், கிராம அலுவலகம், அரசு பெண்கள், ஆண்கள் மேல்நிலை பள்ளிகள் இயங்கி வருகிறது.
மேலும் ஆரம்ப பள்ளிகள், தனியார் பள்ளிகள், சிப்காட் வருவாய் அலுவலகம் தோட்டகலை அலுவலகம், வேளாண்மை அலுவலகம், வட்டார குழந்தைகள் நல அலுவலகம், பேருந்து நிலையம், தினசரி மார்க்கெட் மற்றும் பல்வேறு வங்கிகள் இருப்பதால் நாள் ஒன்றுக்கு பல ஆயிரம் மக்கள் பேருந்து மற்றும் வாகனங்களில் வந்துசெல்வதால் நெரிசல் அதிகரித்து விபத்துகள் அதிகரித்து வருகிறது.
விபத்துகளை தவிர்க்க ஓசூரில் இருந்து சூளகிரி நுழைவுவாயில், கிருஷ்ணகிரியில் இருந்து சூளகிரி நுழைவுவாயில் வரையிலான ஒசூர்- கிருஷ்ணகிரி சாலையில் சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரை நீட்டிக்க வேண்டும். அப்படி நீட்டித்தால் விபத்துகள் வாகன நெரிசல், வீதி மீறல், வாகன நிறுத்தம் பிரச்சனைகள் ஏற்படாது. மேலும் முக்கியமான பகுதிகளில் வேகதடை அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.