உள்ளூர் செய்திகள்

மீட்கப்பட்ட தனியார் கல்லூரி பஸ்சை படத்தில் காணலாம். 

சிதம்பரத்தில் கடத்தப்பட்ட தனியார் கல்லூரி பஸ் மீட்பு : 2 பேர் சிக்கினர்

Published On 2022-07-04 08:04 GMT   |   Update On 2022-07-04 08:04 GMT
  • சிதம்பரத்தில் கடத்தப்பட்ட தனியார் கல்லூரி பஸ் மீட்பு 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • பாஸ்கரன் என்பவர் கடந்த சனிக்கிழமை கல்லூரி பஸ்சை சிதம்பரத்தில் நிறுத்தி இருந்தார். இன்று காலை வழக்கம்போல் பஸ்சை எடுப்பதற்கு பாஸ்கரன் சென்றார்.

கடலூர்:

புதுவையை சேர்ந்த தனியார் கல்லூரி பஸ் வழக்கம் போல் மாணவர்களை கல்லூரிக்கு அழைத்து செல்வதற்காக சிதம்பரம் செல்வது வழக்கம். அதன்படி கல்லூரி பஸ் டிரைவர் சிதம்பரத்தை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் கடந்த சனிக்கிழமை கல்லூரி பஸ்சை சிதம்பரத்தில் நிறுத்தி இருந்தார். இன்று காலை வழக்கம்போல் பஸ்சை எடுப்பதற்கு பாஸ்கரன் சென்றார். அப்போது நிறுத்தியிருந்த இடத்தில் பஸ் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதனை மர்ம நபர்கள் கடத்தி உள்ளனர். இதுகுறித்து அவர் கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சிதம்பரம் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அனைத்து போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி போலீசாரும், கல்லூரி ஊழியர்களும் பஸ்சை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இன்று காலை கடலூர் அருகே எஸ்.என்.சாவடி பகுதியில் கல்லூரி பஸ் நிற்பதாக கல்லூரி ஊழியர்கள் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக புதுநகர் போலீசார் விரைந்து சென்று பஸ்சை மீட்டு சிதம்பரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க முடிவு செய்தனர். இதுகுறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த பஸ்சை கடலூர் எஸ்.என்.சாவடியை சேர்ந்த பெரியசாமி, நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த அஜித்குமார் ஆகியோர் இந்த பஸ்சை கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் உண்மை நிலவரம் தெரியவரும்.

Tags:    

Similar News