உள்ளூர் செய்திகள்

அண்ணையப்பா ஏரிக்கரை உடைந்ததால் தடுப்பு சுவர் அமைக்கும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் நேரில் பார்வையிட்ட காட்சி.

சூளகிரி அருகே கானலட்டியில் உள்ள அண்ணையப்பா ஏரிக்கரை உடைந்ததால் தடுப்பு சுவர் அமைப்பு

Published On 2022-08-29 14:43 IST   |   Update On 2022-08-29 14:43:00 IST
  • தொடர் மழை பெய்து வந்த நிலையில் ஏரி முழுவதுமாக நிரம்பி வழிந்தது.
  • ஏரிக்கரையோரம் தீடீர் என உடைப்பு ஏற்பட்டது.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம்- சூளகிரி தாலுகா கானலட்டி ஊராட்சியை சேர்ந்த அண்ணையப்பா ஏரி 10 ஏக்கர் பரப்பு கொண்ட பெரிய ஏரி.

தொடர் மழை பெய்து வந்த நிலையில் ஏரி முழுவதுமாக நிரம்பி வழிந்தது. இந்நிலையில் ஏரிக்கரையோரம் தீடீர் என உடைப்பு ஏற்பட்டது.

இதை அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினம்மா கிருஷ்ணப்பா நேரில் சென்று பார்வையிட்டு அதிகாரிகளுக்கு தெரியப்ப டுத்தினார்.

பின்னர் சேர்மன் லாவன்யா ஹேமநாத், பி.டி.ஓ.க்கள் கோபால கிருஷ்ணன், சிவக்குமார், மற்றும் பொறியாளர்கள் சென்று பார்வையிட்டு மணல் மூட்டைகள் மூலம் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News