உள்ளூர் செய்திகள்

பாகலூரில் கழிவுநீர் சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்றபோது எடுத்தப்படம்.

பாகலூரில் கழிவுநீர் கால்வாய் மற்றும் வடிகால் தொட்டிகள் அமைக்கும் பணி

Published On 2022-06-18 14:45 IST   |   Update On 2022-06-18 14:45:00 IST
  • பாகலூரில் கழிவுநீர் சாக்கடை அமைக்கும் பணி நடக்கிறது.
  • ஊராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.

ஓசூர்,

ஓசூர் ஒன்றியம் பாகலூர் ஊராட்சியில், தேர்பேட்டை பகுதியில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்திட்டத்தின் கீழ் ரூ.19 லட்சத்து 30,000 மதிப்பில் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் மற்றும் 2 வடிகால் தொட்டிகள் அமைக்கப்பட உள்ளன.

இதற்கான பணிகளை ஊராட்சி தலைவர் வி.டி.ஜெயராமன் நேற்று பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

மேலும் இதில், வார்டு உறுப்பினர் அப்பையா நாயுடு, ஊராட்சி செயலர் சர்வேஷ் ரெட்டி மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News