உள்ளூர் செய்திகள்

சூளாமலை ஊராட்சியில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் கொட்டகை பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி ஆய்வு செய்த போது எடுத்தபடம்.

பர்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 1.7 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டபணிகளை கலெக்டர் ஆய்வு

Published On 2022-07-29 15:05 IST   |   Update On 2022-07-29 15:05:00 IST
  • ரூ. 1.6 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுவரும் சுற்றுசுவர் கட்டுமான பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.
  • ரூ. 70.75 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் மகளிர் சுயஉதவிக்குழு கட்டிட கட்டுமான பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஊராட்சி ஒன்றியம் பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி, சூளாமலை, அஞ்சூர் ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 70.75 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் மகளிர் சுயஉதவிக்குழு கட்டிட கட்டுமான பணிகளையும், சூளாமலை ஊராட்சியில் துாய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.1.76 லட்சம் மதிப்பில் மக்கும் குப்பை, மக்காகுப்பை தரம் பிரிக்கும் கொட்டக்கை பணிகள், மற்றும் ரூ. 1.6 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுவரும் சுற்றுசுவர் கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.

தொடர்ந்து அஞ்சூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 16.40 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடம் கட்டுமான பணிகளையும், செந்தாரப்பள்ளி கிரா மத்தில், ரூ.12.70 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி பணிகள் உள்பட என மொத்தம் ரூ. 1 கோடியே 7 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் திட்டபணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.

மேலும் இந்த பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க ஊரக வளர்ச்சித் துறை பொறியாளர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தர விட்டார்.

Tags:    

Similar News