உள்ளூர் செய்திகள்

நெல்லை மண்டலத்தில் 3 மாதங்களில், 2 டன் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்-ரூ.1 லட்சம் அபராதம் வசூலிப்பு

Published On 2023-07-22 08:45 GMT   |   Update On 2023-07-22 08:45 GMT
  • மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க பல்வேறு பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
  • கடைகளில் பிளாஸ்டிக்பைகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.

நெல்லை:

நெல்லை மாநகராட்சியில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், மீன் உள்ளிட்ட இறைச்சி கடைகள், தள்ளுவண்டி கடை களில் பிளாஸ்டிக் பைகள் அதிக அளவில் பயன் படுத்துவதாகவும், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

மாவட்ட நிர்வாகம் சார்பிலும் நெகிழி இல்லா நெல்லை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க பல்வேறு பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி மாநகரில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் கடைகளுக்கு கடுமையான அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் நெல்லை, பாளை, மேலப்பாளையம், தச்சநல்லூர் உள்ளிட்ட 4 மண்டலங்க ளிலும் மாநகராட்சி சுகாதா ரத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை மண்டலத்தில் உதவி கமிஷனர் வெங்கட்ராமன் மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆகியோரின் அறிவுறுத்த லின் பேரில் கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி முதல் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப் பட்டு அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த மாதம் 18-ந்தேதி வரை சுமார் 3 மாத காலங்களில் இந்த மண்டலத்தில் மட்டும் கடைகளில் இருந்து சுமார் 2 டன் வரையிலான பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக அதன் உரிமையாளர்களிடமிருந்து ரூ.1 லட்சம் அபராத தொகை யாக வசூலிக்கப்பட்டு மாநகராட்சி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

இதுபோல் மற்றும் 3 மண்டலங்களிலும் சேர்த்து சுமார் ரூ.1 லட்சம் வரை பிளாஸ்டிக் பைகளுக்கான அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News