தருமபுரி எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றபோது எடுத்த படம்
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 98 மனுக்களுக்கு உடனடி தீர்வு
- தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் நடைபெற்றது.
- 98 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது.
தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் வாரந்தோ றும் புதன்கிழமை எஸ்.பி அலுவல கத்தில் பொது மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி பொது மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடந்தது.
முகாமிற்கு மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுப் பாதம் தலைமை வகித்தார். ஏடிஎஸ்பி இளங்கோவன் முன்னிலை வகித்தார். முகாமில் மாவட்டம் முழுவதும் 31 காவல் நிலையங்களில் இருந்து தனித்தனியாக புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
நிலத்தகராறு, சொத்து தகராறு, அடிதடி, பொது வழி பிரச்சினை, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 112 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு 98 மனுக்கள் மீது விசாரணை முடித்து வைக்கப்பட்டது. 14 மனுக்கள் நிலுவையில் உள்ளது.
முகாமில் டிஎஸ்பி ஜெயபால், காவல் ஆய்வாளர்கள் சுரேஷ், அன்பழகன், சரவணன், எஸ்ஐக்கள் கண்ணம்மாள், மாதையன், பாரூக் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.