உள்ளூர் செய்திகள்

வேளாண் பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் உடனடி மாணவர் சேர்க்கை 22-ந் தேதி நடக்கிறது

Published On 2023-09-16 10:11 GMT   |   Update On 2023-09-16 10:11 GMT
  • கலந்து கொள்ளும் மாணவர்கள் கல்லூரியை தேர்வு செய்யும் முன் கலந்தாய்வு கட்டணத்தை செலுத்த தேவையில்லை
  • மாணவர் சேர்க்கைக்கான காலி இடங்கள் அவ்வப்போது புதுப்பிக்கபடும்.

கோவை,

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான உடனடி மாணவர் சேர்க்கை வருகிற 22-ந் தேதி நடைபெற உள்ளது.

உடனடி மாணவர் சேர்க்கையில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் கலந்தாய்வுக் குரிய குறிப்பிட்ட தேதியில் கோவையில் உள்ள வேளாண்மை பல்கலைக் கழகத்துக்கு வர வேண்டும்.

உடனடி மாணவர் சேர்க்கை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் இணைப்பு கல்லூரிகளுக்கு மட்டுமே பொருந்தும். உறுப்பு கல்லூரிகளுக்கு பொருந்தாது. இதில் இடம் கிடைக்கப்பெற்ற மாணவர்களிடம் இருந்து மட்டுமே கலந்தாய்வு கட்டணம் பெறப்படும். பொது கலந்தாய்வில் இடம் கிடைக்கப் பெற்று தவறவிட்டவர்கள் மற்றும் இடம் கிடைத்து சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாதவர்கள் உடனடி மாணவர் சேர்க்கையில் கலந்து கொள்ளலாம்.

பொது கலந்தாய்வில் இடம் கிடைக்கப் பெற்று, முன்னரே சேர்க்கை பெற்றவர்கள் அல்லது இடை நிறுத்தம் செய்து கொண்டவர்கள் உடனடி மாணவர் சேர்க்கையில் கலந்து கொள்ள முடியாது.

கலந்து கொள்ளும் மாணவர்கள் கல்லூரியை தேர்வு செய்யும் முன் கலந்தாய்வு கட்டணத்தை செலுத்த தேவையில்லை. கலந்தாய்வில் இடம் கிடைக்க பெற்ற மாணவர்களில் எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவு மாணவர்கள் ரூ.1,500 மற்றும் இதர பிரிவினர் ரூ.3 ஆயிரம் செலுத்த வேண்டும். இணைப்பு கல்லூரிக ளுக்கான ஆண்டுக்கட்டணம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை இருக்கும். உடனடி மாணவர் சேர்க்கையில் கலந்து கொண்ட மாணவர்களின் வருகைப்பதிவேடு குறிக்கப்பட்டு, தரவரிசை நிர்ணயிக்கப்படும்.

தரவரிசையின் அடிப்ப டையில் மாணவர்கள் கல்லூரி மற்றும் பட்டப் படிப்பை தேர்வு செய்ய அழைக்கப்படுவார்கள். வகுப்பு வாரியான இட ஒதுக்கீடு கலந்தாய்வில் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள் மற்றும் காலியிடங்களுக்கான அட்டவணை வருகிற 21-ந் தேி இணையதளத்தில் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கைக்கான காலி இடங்கள் அவ்வப்போது புதுப்பிக்கபடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News