உள்ளூர் செய்திகள்

ராஜகிரி நிஸ்வான் பள்ளியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்தப்படம்.

ராஜகிரி நிஸ்வான் பள்ளியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

Published On 2023-03-30 14:56 IST   |   Update On 2023-03-30 14:56:00 IST
  • பாபநாசம் அருகே பள்ளியில் ரமலானை முன்னிட்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெண்கள் உள்பட ஏராளமான இஸ்லாமியர்கள், கலந்து கொண்டனர்.

மெலட்டூர்:

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள ராஜகிரி மதரஸாயே ஹிதாயத்துன் நிஸ்வான் பள்ளியில் ரமலானை முன்னிட்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பாபநாசம் பெரிய பள்ளிவாசல் ஜமாத் துணைத்தலைவர் ஏ.ஹாஜாமைதீன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கௌரவ ஆலோசகர் எம்.ஜெ.அப்துல்ரவூப், ராசகிரி பெரி பள்ளிவாசல் பரிபாலன சபை தலைவர் யூசுப்அலி, ஆர்டிபி கல்லூரி தாளாளர் தாவூத்பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெரிய பள்ளிவாசல் இமாம் முஹம்மது இஸ்மாயில் கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.ஜமாத்துல் உலமா சபை மாநில துணை தலைவர் ஜீயாவுதீன் பார்கவி நோம்பை திறந்து பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் நிஸ்வான் பள்ளியின் தலைவர் நூர்முஹம்மது, செயலாளர் முஹம்மது பாரூக், பொருளாளர் முஹம்மதுரபி, மற்றும் பாபநாசம் ராசகிரி, பண்டா ரவாடை ஜமாத்தார்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெண்கள் உள்பட ஏராளமான இஸ்லாமியர்கள், கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News