கடைகளில் பயன்படுத்திய வீட்டு கியாஸ் சிலிண்டர்கள் பறிமுதல்
- ஓட்டல், டீக்கடைகளில் விதிகளை மீறி வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் 10 சிலிண்டர்களைப் பயன்படுத்தியதை கண்டறிந்து, அவைகளைப் பறிமுதல் செய்தார்.
- கடைகள் மீது, வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி, அபராதம் விதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகர் பகுதிகளில் வீடுகளுக்கு வழங்கப்படும் கியாஸ் சிலிண்டர்களை, பேக்கரி கடைகள், ஓட்டல்கள், டீக்கடைகள், உணவு விடுதிகளில் பெருமளவு பயன்படுத்துவதாக பறக்கும் படை தாசில்தார் இளங்கோவிற்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நேற்று கிருஷ்ணகிரி நகர் பகுதியில் உள்ள 5 ரோடு ரவுண்டானா, சேலம் சாலை, சென்னை சாலை, ராசுவீதி, புதுப்பேட்டை, சந்தைபேட்டை காய்கறி மார்க்கெட், காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல், பேக்கரி, டீக்கடைகள், உணவு விடுதிகள் ஆகியவற்றில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் ஓட்டல், டீக்கடைகளில் விதிகளை மீறி வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் 10 சிலிண்டர்களைப் பயன்படுத்தியதை கண்டறிந்து, அவைகளைப் பறிமுதல் செய்தார். அப்படிப் பயன்படுத்திய கடைகள் மீது, வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி, அபராதம் விதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இது குறித்து தாசில்தார் இளங்கோ கூறுகையில், வீடுகளுக்கு பயன்படுத்தும் சிலிண்டர்களை கடைகளுக்கு வணிக நோக்கத்திற்காக பயன்படுத்த கூடாது. அவ்வாறு பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.