உள்ளூர் செய்திகள்

சுங்குவார்சத்திரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு

Published On 2022-11-30 15:43 IST   |   Update On 2022-11-30 15:43:00 IST
  • சண்முகநாதன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது யாரோ மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து தங்க நகை, ரொக்க பணம் போன்றவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
  • திருட்டு தொடர்பாக சண்முகநாதன் சுங்குவார்சத்திரம் போலீசில் புகார் செய்தார்.

சுங்குவார்சத்திரம்:

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த சோகண்டி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகநாதன். இவரது மகள் பிரசவத்திற்காக வீட்டுக்கு வந்து இருந்தார். குழந்தை பிறந்து மகளை செய்யாறில் உள்ள மருமகன் வீட்டில் அழைத்து சென்று விடுவதற்கு நேற்று முன் தினம் சண்முகநாதன் குடும்பத்துடன் வீட்டை பூட்டிக் கொண்டு சென்றார்.

நேற்று சண்முகநாதனின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து அவருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.

சண்முகநாதன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது யாரோ மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 20 பவுன் தங்க நகை, ரொக்க பணம் ரூ.1 லட்சம் போன்றவற்றை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

இது குறித்து சண்முகநாதன் சுங்குவார்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News