ஓசூர் ,தளி ரோடு பகுதியில் கம்பளி வியாபாரியின் இருசக்கர வாகனத்துடன் கம்பி நீட்டிய வாலிபர்
- பாலக்கோடு அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு குளிக்க சென்றார்.
- வியாபாரம் செய்தபோது பிடிபட்டார்.
கிருஷ்ணகிரி,
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் ஓசூர் அருகேயுள்ள லட்சுமிதேவி நகரில் தங்கி இருசக்கர வாகனம் மூலம் கம்பளி வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் வியாபாரத்துக்கு சென்றபோது பாலக்கோடு அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு குளிக்க சென்றார்.
அப்போது அவ்வழியாக வந்த ஜெயக்குமார் என்ற வாலிபர் ராஜேஷின் இருசக்கர வாகனத்தை கம்பளிகளுடன் ஒட்டி சென்றுவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஷ் ராயக்கோட்டை போலீசில் இதுகுறித்து புகார் செய்தார் .
இந்நிலையில் இருசக்கர வாகனத்தை கடத்திய ஜெயக்குமார் நரேந்திரமங்கலம் பகுதியில் கடை விரித்து கம்பளி வியாபாரத்தை தொடங்கியுள்ளார்.
அப்பகுதியில் திடீரென ஒரு வியாபாரி வந்ததை கண்டு அப்பகுதி வியாபாரிகள் விசாரித்தபோது ஜெயக்குமார் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த அவர்கள் போலீசுக்கு தெரிவித்தனர்.
இதையடுத்து ராயக்கோட்டை போலீசார் விரைந்து வந்து ஜெயக்குமாரை கைது செய்து விசாரித்தபோது அவர் ராஜேஷிடம் கைவரிசை காட்டியதும் வியாபாரத்தில் இறங்கியதால் சிக்கியதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.