விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
ஓசூர் பி.எம்.சி.டெக் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
- விழாவிற்கு பி.எம்.சி டெக் குழுமத்தின் தலைவர் குமார் தலைமை தாங்கினார்.
- கல்லூரியில் பயின்ற 457 மாணவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டங்களை பெறுகின்றனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் என்ஜினீயர் பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரியில் 17-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு பி.எம்.சி டெக் குழுமத்தின் தலைவர் குமார் தலைமை தாங்கினார். செயலாளர் மலர், கல்லூரியின் அறங்காவலர் சசிரேக்கா மற்றும் முதல்வர் சித்ரா ஆகியோர் இணைந்து பட்டமளிப்பு விழாவினை விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
இவ்விழாவில் பி.எம்.சி. டெக் கல்லூரியின் இயக்குனர் சுதாகரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பெங்களூரு விருட்சுவா கன்சல்டன்சி பிரைவேட் லிமிடெட் மனிதவள மேலாண்மை இயக்குநர் சந்தர சேகர் சென்னியப்பன் பங்கு பெற்று பட்டதாரி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
விழாவில் பி.எம்.சி.டெக் கல்லூரியின் தலைவர் குமார் பேசுகையில் பி.எம்.சி பட்டதாரிகள் அனைவரும் கிடைக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தி கொண்டு வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தார். சிறந்த தொழில் முனைவோர்களாகி நமது தேசத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று வாழ்த்தினார்.
கல்லூரியில் பயின்ற 457 மாணவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டங்களை பெறுகின்றனர்.
9 மாணவர்கள் பல்கலைக்கழகம் அளவில் சாதனைகளை படைத்து ள்ளனர்.
மேலும் அதிக பட்சமாக 9.5 லட்சம் மற்றும் சராசரியாக 3.6 லட்சம் ரூபாய் ஆண்டுக்கு ஊதியம் தரும் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.