உள்ளூர் செய்திகள்
ஓசூர் மாநகராட்சி பகுதிகளில் பன்றிகளை வளர்த்து, விற்க அனுமதிக்காவிட்டால் சாகும் வரை போராட்டம்- பன்றி வளர்ப்போர் மனு
- கடைகளில் பன்றி இறைச்சி விற்பனை செய்ய தங்கள் இனத்தினருக்கு அனுமதி வழங்க வேண்டும்.
- இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மாவட்டம் முழுவதும் உள்ள பன்னியாண்டி இன மக்களை ஒன்றுதிரட்டி சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
ஓசூர்,
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பன்றி வளர்ப்பில் ஈடுபடக்கூடாது என்றும், பன்றி வளர்ப்பு கொட்டகைகளை 7 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என்றும் ஓசூர் மாநகராட்சி சார்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட பன்னியாண்டி சமூக நல சங்கத்தினர் ஓசூர் மாநகராட்சி அலுவலரிடம் மனு ஒன்றை அளித்தனர்.
அதில்பன்றி வளர்ப்பில் ஈடுபடக்கூடாது என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும் மாநகராட்சிக்குட்பட்ட கடைகளில் பன்றி இறைச்சி விற்பனை செய்ய தங்கள் இனத்தினருக்கு அனுமதி வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மாவட்டம் முழுவதும் உள்ள பன்னியாண்டி இன மக்களை ஒன்றுதிரட்டி சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.