உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

சுரண்டை அரசு கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்

Published On 2023-02-03 08:45 GMT   |   Update On 2023-02-03 08:45 GMT
  • சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் மவுன விரத போராட்டம் நடந்தது.
  • போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது.

சுரண்டை:

தமிழ்நாடு அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில், சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் மவுன விரத போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர் நலச்சங்க சுரண்டை கிளை தலைவர் கதிரேசன் தலைமை தாங்கினார். கவுரவ விரிவுரையாளர்கள் அண்ணாமலை, மாரிச்செல்வி, குழல் வாய்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவக்குமார் வரவேற்றார்.

போராட்டத்தில் தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றும் அனைத்து கவுரவ விரிவுரையாளர்களுக்கும் அரசாணை எண் 56-ன் கீழ் பணி வழங்க வேண்டும். பல்கலைக்கழக மானிய குழு நிர்ணயம் செய்த ஊதிய நிர்ணயத்தின்படி ஒவ்வொரு கவுரவ விரிவுரையாளர்களுக்கும் பணிக்காலம் முழுமைக்குமான நிலுவைத் தொகை வழங்க வேண்டும், மாநில தகுதி தேர்வு உடனடியாக நடத்த வேண்டும். கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மவுன விரத போராட்டம் நடந்தது. இதில் கவுரவ விரிவுரையாளர்கள் முத்துலட்சுமி, பிரியா ராமவாணி, ஜெகானந்தஜோதி, முத்தரசி, சுபசங்கரி, அரிராம், விஜய் அமிர்தராஜ் உட்பட அனைத்து கௌரவ விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News