உள்ளூர் செய்திகள்

படகுகளில் பயணம் செய்த மக்களை படத்தில் காணலாம். 

விடுமுறை தினமான நேற்று கிருஷ்ணகிரி அணை, பூங்காக்களில் குவிந்த மக்கள்

Published On 2022-06-13 16:17 IST   |   Update On 2022-06-13 16:17:00 IST
  • படகில் மக்கள் பயணம் செய்து மகிழ்ந்தனர்.
  • காதல் ஜோடிகள் மரத்தடியில் ஆங்காங்கே அமர்ந்து கொஞ்சி மகிழ்ந்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மிக முக்கிய சுற்றுலாமாக கிருஷ்ணகிரி அணை, அவதானப்பட்டி சிறுவர் பூங்கா மற்றும் படகு இல்லம் உள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஏராளமானோர் தங்கள் குடும்பத்தினருடன் பொழுதுபோக்க அணை பூங்கா மற்றும் அவதானப்பட்டி சிறுவர் பூங்கா, படகு இல்லத்தில் குவிந்தனர்.

பகல், 1 மணி முதல் மக்கள் கூட்டம் அப்பகுதியில் அதிகரித்தது. அவ்வாறு வந்த மக்கள் அணை எதிரிலுள்ள ஆற்றில் குளித்தும், மீன்கள் பிடித்தும் விளையாடினர்.

அதேபோல் அணை பகுதி பூங்காவில் குடும்பத்துடன் வந்து விடுமுறையை கொண்டாடினர்.

இதேபோல் அவதானப் பட்டி சிறுவர் பூங்காவில் குவிந்த பொதுமக்கள், அங்குள்ள விளையாட்டு உபகரணங்களில் தங்கள் குழந்தைகளை ஆட வைத்து மகிழ்ந்தனர்.

அத்துடன் படகு இல்லத்திற்கும் சென்று படகு சவாரி மேற்கொண்டனர். சிறுவர் பூங்கா வெளியே ஏராளமான கார்கள், டூவீலர்கள் நிறுத்தப் பட்டிருந்தன.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் இருப்ப தால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சமைத்து வைத்த உணவுகளை எடுத்து வந்து பூங்காக்களில் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

காதல் ஜோடிகள் மரத்தடியில் ஆங்காங்கே அமர்ந்து கொஞ்சி மகிழ்ந்தனர். நேற்று வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அதிகம் காணமுடிந்தது.

இதேபோல் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசல் சாவாரி செய்தும் மகிழ்ந்தனர். மேலும் அவர்கள் பூங்காக்களில் மீன்சாப்பாடு வாங்கி சாப்பிட்டனர். 

Similar News