உள்ளூர் செய்திகள்

பயிற்சியில் மாணவர்களுக்கு ஓய்வு பெற்ற வன இலாகா அதிகாரி ஏமராஜா பரிசுகள் வழங்கிய காட்சி.

இடையர்காடு கிராமத்தில் இந்து சமய வழிபாட்டு பயிற்சி வகுப்பு

Published On 2023-05-16 08:22 GMT   |   Update On 2023-05-16 08:22 GMT
  • சுமார் 25 மாணவ -மாணவிகள் பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
  • மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

தென்திருப்பேரை:

ஏரல் அருகிலுள்ள இடையர்காடு கிராமத்தில் முத்தரம்மன் கோவில் வளாகத்தில் இந்து சமய பண்பாட்டு பயிற்சி வகுப்புகள் கடந்த 75 நாட்களாக நடைபெற்று வருகிறது.

பயிற்சி வகுப்பு

அதில் இடையர்காடு கிராமத்தின் பள்ளியில் படிக்கும் சுமார் 25 மாணவ -மாணவிகள் இந்து சமய பண்பாட்டு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்த வகுப்பில் மாணவர்களுக்கு இந்து சமயத்தின் ஸ்லோகம், மந்திரம், பஜனை பாடல்கள், யோகா மற்றும் செய்முறை பயிற்சி கற்று கொடுக்கப்படுகிறது.

கல்வி உபகரணம்

பயிற்சி வகுப்பின் கடைசி நாளான நேற்று ஓய்வு பெற்ற வன இலாகா அதிகாரி ஏமராஜா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களான புத்தகப்பை, குடிநீர்பாட்டில், நோட்டு, புத்தகம், ஸ்கெட்ச், பென்சில் பாக்ஸ் ஆகிய பரிசு பொருட்கள் வழங்கினார். மேலும் மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகக்குழு செயலாளர் செல்லப்பாண்டி, ஊர் பொதுமக்கள் சின்னத்துரை, செந்தூர்பாண்டி, ராஜபாண்டி, தங்கராஜ், ராமர், அரிகிருஷ்ணன், ஜெயபால், நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை ஒருங்கிணைப்பாளர் ஜெயராணி மற்றும் வெங்கடேசன் ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News