நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஓசூரில் உயர் கல்வி முகாம்
- உயர் கல்வி படிக்க இயலாத மாணவ- மாணவியர், உயர் கல்வி பயில வழிகாட்டும் உயர் கல்வி முகாம், நேற்று ஓசூரில் நடைபெற்றது.
- முன்ன தாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி வரவேற்றார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர் கல்வி படிக்க இயலாத மாணவ- மாணவியர், உயர் கல்வி பயில வழிகாட்டும் உயர் கல்வி முகாம், நேற்று ஓசூரில் நடைபெற்றது.
ஓசூர் ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளியில் நடந்த இம்முகாமிற்கு
சப்- கலெக்டர் சரண்யா தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி, தலைமை யுரையாற்றினார். முன்ன தாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி வரவேற்றார்.
இதில், ஓசூர் டி.எஸ்.பி. பாபு பிரசாந்த் மற்றும் அனிருத் கங்காவரம் உள்ளிட்ட அதிகாரிகள், பல்வேறு துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு உயர் கல்வியின் முக்கியத்துவம் குறித்து ஊக்குவித்து பேசினர்.
காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த முகாமில், ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர்கள் கோவிந்தன், முனிராஜ், உள்பட பல்வேறு அரசு துறை அதிகரிகள் கலந்து கொண்டனர்.
இதில் ஏராளமான மாணவ, மாணவியர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.