உள்ளூர் செய்திகள்
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் உயர் தொழில்நுட்ப நாற்றங்கால் அமைத்தல் பயிற்சி
- மண்புழு உரம் தயாரித்தல் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
- இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அரவேணு,
கோத்தகிரி வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மாநில அளவிலான காய்கறி பயிர்களில் உயர் தொழில்நுட்ப நாற்றங்கால் அமைத்தல் குறித்த பயிற்சி கோவையில் நடைபெற்றது.
இதில் குளித்தட்டு முறையில் நாற்றங்கால் அமைத்தல், நிழல் வலை கூடாரத்தில் நாற்றங்கால் அமைத்தல், நாற்றங்காலில் பயன்படுத்தபடும் அங்கக இடுபொருட்கள் குறித்து வகுப்புகள் மற்றும் செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டது.
மேலும் பாதுகாப்பான சூழலில் காய்கறி சாகுபடி, நுண்ணீர் பாசனத்தின் மூலம் நீர் மற்றும் உரங்களை வழங்குதல், மண்புழு உரம் தயாரித்தல் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.