உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கை கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

சீர்காழியில், மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி- கருத்தரங்கம்; கலெக்டர் பார்வையிட்டார்

Published On 2023-05-31 10:00 GMT   |   Update On 2023-05-31 10:00 GMT
  • மயிலாடுதுறை மாவட்டத்தில் 3-வது மரபுசார் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.
  • பாரம்பரிய நெல் மற்றும் இதர பயிர் சாகுபடி முறைகளை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதி சீரமைப்பு திட்டம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சர்வதேச சிறுதானிய ஆண்டு-2023 மற்றும் மரபுசார் பன்முக தன்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கை கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இதுகுறித்து கலெக்டர் மகாபாரதி பேசியதாவது:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் 3-வது மரபுசார் பன்முகத் தன்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் பாரம்பரிய நெல் மற்றும் இதர பயிர் சாகுபடி முறைகளையும், அவற்றை மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் முறைகளையும், இங்கு வந்துள்ள விவசாயிகள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

நிகழ்ச்சியில், பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபால், சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News