உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளியில் மூலிகை தோட்டம்

Published On 2022-08-15 10:18 GMT   |   Update On 2022-08-15 10:18 GMT
  • மூலிகைத் தோட்டம் பள்ளி கணித ஆசிரியர் அந்தோனி ராஜ் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்டுள்ளது.
  • மூலிகை செடிகளின் மருத்துவ குணங்களைப் பற்றி மாணவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது.

படப்பை:

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளயில் அரியவகை மூலிகை தோட்டம் மற்றும் மலர் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா பள்ளி தலைமை ஆசிரியர் பேச்சியம்மாள் தலைமையில் நடைபெற்றது. பள்ளி ஆசிரியர் அந்தோனி ராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி மேத்தா வசந்தகுமார் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

மூலிகை தோட்டத்தில் சித்தரத்தை, ஆடாதொடா, கருநொச்சி, சிறியாநங்கை பெரியாநங்கை, வெட்டிவேர், சிறுகுறிஞ்சான், தழுதாழை, உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட அரிய வகை மூலிகைகள், மற்றும் மலர் செடிகள் நடப்பட்டுள்ளது.

மூலிகைத் தோட்டம் பள்ளி கணித ஆசிரியர் அந்தோனி ராஜ் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் மூலிகை செடிகளின் மருத்துவ குணங்களைப் பற்றி மாணவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. இதில் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News