உள்ளூர் செய்திகள்

சாலையை விட்டு இறங்கிய லாரி.

கனரக லாரி சாலையை விட்டு இறங்கியதால் போக்குவரத்து பாதிப்பு - ராதாபுரம் சாலையில் அணிவகுத்த வாகனங்கள்

Published On 2022-11-10 15:06 IST   |   Update On 2022-11-10 15:06:00 IST
  • நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை அடுத்த விஜயாபதி அருகே தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான காற்றாலை செயல்பட்டு வருகிறது.
  • ராதாபுரம் வழியாக கன்னியாகுமரி, நாகர்கோவில், கூடங்குளம், இடிந்தகரை, கூத்தன்குழி, திசையன்விளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

நெல்லை:

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை அடுத்த விஜயாபதி அருகே தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான காற்றாலை செயல்பட்டு வருகிறது.

இந்த காற்றாலைக்கு நாமக்கல்லில் இருந்து உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு சுமார் 28 டயர்கள் கொண்ட கனரக லாரி இன்று காலை ராதாபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது ராதாபுரம் ஊருக்குள் ஒரு வளைவில் திரும்பும்போது எதிர்பாராதவிதமாக சாலையை விட்டு லாரி இறங்கிவிட்டது.

இதனால் அந்த பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஸ்தம்பித்து நின்றன. இன்று அதிகாலை 4 மணி முதலே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 80 டன் எடை கொண்ட இந்த உதிரி பாகங்களை அகற்றுவதற்கு அதிக திறன் கொண்ட கிரேன் கொண்டு வரப்பட்ட பின்பு தான் அகற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாற்றுப்பாதை

இதனால் ராதாபுரம் வழியாக கன்னியாகுமரி, நாகர்கோவில், கூடங்குளம், இடிந்தகரை, கூத்தன்குழி, திசையன்விளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

Tags:    

Similar News