உள்ளூர் செய்திகள்

ஓசூர் சுற்று வட்டார பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ள வாகன ஓட்டிகளை படத்தில காணலாம்.

ஓசூர் ரயில் நிலையம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல்-வாகன ஓட்டிகள் அவதி

Published On 2023-09-01 15:33 IST   |   Update On 2023-09-01 15:33:00 IST
  • பாலத்தை அகலப்படுத்தி விரிவாக்க பணி நடைபெறுகிறது.
  • நாள்தோறும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

ஓசூர்,  

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் - தேன்கனிக்கோட்டை சாலையில் ஆர்.சி.சர்ச் அருகே ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இதன்மேல்பகுதியில் தண்ட வாளத்தில் ரயிலும், கீழே அதன் அடிபகுதியில் சாைலையில் வாகனங்களும் சென்று வருகின்றன. இந்த பாலத்தை அகலப்படுத்தி விரிவாக்க பணி நடைபெறுகிறது.

இந்த நிலையில் கர்நாடகாவிலிருந்து ஓசூர் ெரயில் நிலையம் வரை ஏற்கனவே உள்ள ரயில் வழிப்பாதை இரு வழிப்பாதையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதனுடன் சேர்த்து தேன்கனிக் கோட்டை சாலையில் உள்ள பாலத்தை விரிவாக்கம் செய்யவும் முடிவு செய்யப்பட்டு, கடந்த 6-ம் தேதி இதற்கான பணிகள் தொடங்கி, நடைபெற்று வருகிறது.

இதையொட்டி, தேன்கனிக்கோட்டை சாலையில் அடுத்த 7 மாதங்களுக்கு வாகன போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது . அதன்படி ஓசூரில் இருந்து தேன் கனிக்கோட்டை செல்லும் கனரக வாக னங்கள் மாற்றுப் பாதையில் சென்று வருகின்றன. இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள், ெரயில் நிலையம் அருகேயுள்ள ெரயில்வே கீழ் பாதை வழியாக சென்று வர ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

இவ்வாறு ரெயில்வே கீழ் பாதை வழியாக சென்று வரும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவாறு உள்ளது. இதனால் நாள்தோறும் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நேற்று மாலை, ஏராளமான டூவீலர்கள் மற்றும் ஆட்டோக்கள் அந்த வழியாக சென்றதால் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் திணறி, மிகவும் அவதியடைந்தனர்.

அந்த பகுதியை கடந்து செல்லவே நீண்ட நேரமானது. மேலும் அவசர பணி நிமித்தமாக செல்வோரும் நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டது. அந்த வழியாக நடந்து சென்ற பொது மக்களும் அவதிப்பட்டனர்.

Tags:    

Similar News