உள்ளூர் செய்திகள்

பள்ளத்தில் பாய்ந்த அரசு பஸ்சை மீட்கும் முயற்சி நடந்த போது எடுத்தபடம்.

தருமபுரியில் கடும் பனிபொழிவால்சாலையோர பள்ளத்தில் பாய்ந்த அரசு பேருந்து

Published On 2023-01-16 15:22 IST   |   Update On 2023-01-16 15:22:00 IST
  • கடந்த ஒரு வாரமாக காலை 9 மணி வரை பனிப்பொழிவு இருந்து வருகிறது.
  • முழுமையான பாதைகள் தெரியாததால், சாலையோர பள்ளத்தில் அரசு பேருந்து இறங்கியது.

தருமபுரி,

கார்த்திகை மாதம் தொடங்கிய நாள் முதல் தருமபுரி மாவட்டத்தில் கடுமையான பனிபொழிவு நிலவு வருகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக காலை 9 மணி வரை பனிப்பொழிவு இருந்து வருகிறது. தருமபுரி நகர் பகுதியில் இருந்து ஆட்சியர் அலுவலகம், எமக்குட்டியூர், காரயோனி, வெள்ளோலை, ராஜாபேட்டை வழியாக செல்லும் நகர்ப்புற பேருந்து வழக்கம்போல், அதிகாலை இயக்கப்பட்டது.

அப்பொழுது எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் இருந்துள்ளது. இந்நிலையில் அரசு பேருந்து ஏமக்குட்டியூர் அருகே வந்த போது, எதிரே இருசக்கர வாகனம் ஒன்று வந்துள்ளது.

அப்பொழுது முழுமையான பாதைகள் தெரியாததால், சாலையோர பள்ளத்தில் அரசு பேருந்து இறங்கியது. இதில் பேருந்து ஒரு பக்கமாக சாய்ந்ததால் பேருந்தில் பயணித்த பயணிகள் அலறடித்து சத்தமிட்டனர்.

ஆனால் பேருந்து சாய்ந்த நிலையில் இருந்ததால், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இயக்கி விட்டனர். தருமபுரி சுற்று வட்டார பகுதிகளில், சாலையில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு இருந்ததால், அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் இறங்கியது.

மேலும் அதிர்ஷ்ட வசமாக பெரும் பாதிப்புகள் ஏற்படவில்லை. அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் சிக்கியதால், அதிகாலை பூக்களை, விற்பனை செய்ய பூ மார்க்கெட்டிற்கு எடுத்துச் செல்லும் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

Tags:    

Similar News