உள்ளூர் செய்திகள்

தருமபுரி மாவட்டத்தில் கன மழை பெய்தது

Published On 2023-10-17 15:54 IST   |   Update On 2023-10-17 15:54:00 IST
  • பயிர்கள் மழையின்றி காய்ந்து வாடியது.
  • பொது மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

தருமபுரி,

மாதம் தொடங்கியதில் இருந்து மாவட்டம் முழுவதும் கடும் வெப்பம் நிலவி வந்தது. தமிழகத்தில் தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

அதனடிப்படையில் நேற்று மாலை தருமபுரி, நல்லம்பள்ளி, தீர்த்தமலை, நரிபள்ளி, வேட்ரபட்டி, பி.பள்ளிபட்டி, கீரைபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்தது. கோடை வெயி–லுக்கு இணையாக மாவட் டத்தில் சுமார் 90 டிகிரி வெயில் பதிவாகி வந்த நிலையில், பொது மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

மேலும் மானாவாரி நிலங்களில் சிறுதானியங்கள் சோளம், சாமை, கேழ்வரகு, உள்ளிட்ட பயிர்கள் மழையின்றி காய்ந்து வாடியது.

மேலும் மாவட்ட முழுவதும் பல ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு அறுவடை நேரத்தில் நிலத்தில் ஈரம் இல்லாததால் நிலக்கடலையை பயிரிட்ட விவசாயிகள் பறிக்க முடியாமல் தவித்து வந்தநிலையில் இந்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மேலும் சிறுதானிய பயிர்களுக்கு நல்ல மழையாக அமைந்துள்ளது.

Tags:    

Similar News