உள்ளூர் செய்திகள்
காரைக்காலில் காற்றுடன் கனமழை: பொதுமக்கள் அவதி
- 10 மணிக்கு மேல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
- காரைக்கால் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை.
புதுச்சேரி:
வங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக, இன்று அதிகாலை முதல் லேசான தொடர் மழை காரைக்காலில் பெய்தது. தொடர்ந்து 10 மணிக்கு மேல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
அண்டை மாநிலமான தமிழகத்தில் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், காரைக்கால் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.