உள்ளூர் செய்திகள்
கனமழை
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
- சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்துவருகிறது.
- சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்குகிறது.
சென்னை:
அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுந்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசனது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. கிண்டி, மாம்பலம், எழும்பூர், சென்னை சென்ட்ரல், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், வளசரவாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.
சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்குகிறது.