உள்ளூர் செய்திகள்
தருமபுரி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
- சில நாட்களாக மாலை நேரங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
- தருமபுரி, ஒட்டப்பட்டி, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் நல்ல மழை பெய்தது.
தருமபுரி,
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெப்பம் அதிகரித்து வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மாலை திடீர் மேகம் சூழ்ந்து மழை பெய்தது.
இதில் தருமபுரி, ஒட்டப்பட்டி, கடத்தூர், ஒடசல்பட்டி, மணியம்பாடி, ராணிமூக்கனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் நல்ல மழை பெய்தது.
இந்த மழையால் கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து ஓரளவுக்கு பொதுமக்கள் விடுபட்டு நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
தருமபுரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.