உள்ளூர் செய்திகள்
- சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.
- பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் நேற்று இரவு 10 மணியளவில் தொடங்கிய மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. இதேபோல் இன்று காலை வரை கன மழை கொட்டியது. ஓரிக்கை, விலிமேடு, மாகரல், தாமல், பாலுசெட்டி சத்திரம், பரந்தூர், ராஜகுளம், வாலாஜாபாத், சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதலே கனமழை பெய்தது.
இதனால் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.