கொடைக்கானலில் வெளுத்து வாங்கிய கனமழை.
கொடைக்கானலில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய கன மழை
- சாரலாக தொடங்கி சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது.
- இதன் காரணமாக பிரதான சாலைகள் முழுவதிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
கொடைக்கானல் :
கொடைக்கானல் மற்றும் மலை கிராமங்களில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே வெயி லின் தாக்கம் அதிகரித்து வந்தது. மலைப்பகுதியில் மழை இல்லாததால் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சிரமத்தை சந்தித்து வந்தனர்.
மேலும் வனப்பகுதியிலும் வறட்சி நிலவியதால் வன விலங்குகள் தண்ணீர் தேடி அலைந்து வந்தன. இதனால் அருவி பகுதிகளில் யானை, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் முகாமிட்டது. மேலும் குடியிருப்பு, விவசாய நிலங்களுக்குள் வன விலங்குகள் புகுந்ததால் விவசாயிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
இந்த நிலையில் அவ்வப்போது பகல், இரவு நேரங்களில் சாரல் மழை பெய்தது . நேற்று காலை முதல் நகர் பகுதிகளான நாயுடுபுரம் , ஏரிச்சாலை , அண்ணா சாலை , செண்பகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மேகமூட்டம் நிலவி வந்தது. மாலை வேளையில் சாரலாக தொடங்கி சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது.
இதன் காரணமாக பிர தான சாலைகள் முழுவதி லும் தண்ணீர் பெருக்கெடு த்து ஓடியது . திடீரென வெளுத்து வாங்கிய மழையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்தனர்.