உள்ளூர் செய்திகள்

நடை பயணம் பேரணியை வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன் மற்றும் மாதவன் தொடங்கி வைத்த காட்சி.

வெண்ணந்தூரில் சுகாதார நடைபயணம்

Published On 2022-11-20 08:58 GMT   |   Update On 2022-11-20 08:58 GMT
  • உலக கழிவறை தினத்தை முன்னிட்டு ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெண்ணந்தூர் வட்டாரத்தைச் சேர்ந்த 24 ஊராட்சிகளிலும் சுகாதார நடை பயணம் நடந்தது.
  • இதில் பள்ளி மாணவ -மாணவிகள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ராசிபுரம்:

உலக கழிவறை தினத்தை முன்னிட்டு ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெண்ணந்தூர் வட்டாரத்தைச் சேர்ந்த 24 ஊராட்சிகளிலும் சுகாதார நடை பயணம் நடந்தது.

இந்த நடை பயணத்தை வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன் மற்றும் மாதவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதில் பள்ளி மாணவ -மாணவிகள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அனைவரும் கழிவறைகளை பயன்படுத்த வேண்டும். திறந்தவெளியில் மலம் கழிக்க கூடாது.

குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் போன்ற விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

அலவாய்ப்பட்டி ஊராட்சி வெள்ளப் பிள்ளையார் கோவில் அருகே நடந்த நிகழ்ச்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News