உள்ளூர் செய்திகள்

மான்களை வேட்டையாட முயன்றவர் சிக்கினார்

Published On 2023-04-01 13:32 IST   |   Update On 2023-04-01 13:32:00 IST
  • மொரப்பூர் காப்புக்காட்டு பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
  • இளவரசன் என்பவர் மான்களை வேட்டை யாடுவதற்கு வலைகளை கட்டி வைத்திருப்பது தெரிய வந்தது.

மொரப்பூர்,

தருமபுரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் விலங்குகளை வேட்டையாடப்படுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மொரப்பூர் வனசரகத்திற்குட்பட்ட கீழ் மொரப்பூர் காப்புக்காட்டு பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியில் புதிய நகரம் கிராமத்தை சேர்ந்த இளவரசன் என்பவர் மான்களை வேட்டை யாடுவதற்கு வலைகளை கட்டி வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் அப்பல்ல நாயுடு உத்தரவுப்படி இளவரசனுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News