உள்ளூர் செய்திகள்
இரவு தாமதமாக வந்தார்: தாய் கண்டித்ததால் விஷம் குடித்து மகள் சாவு
- தாய் கண்டித்ததால் விஷம் குடித்து மகள் தற்கொலை செய்த பரிதாபம்.
- இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஓசூர்,
ஓசூர் கீழ் கொல்லர் தெருவை சேர்ந்த முரளி என்பவரது மனைவி சித்ரா (28). இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
கடந்த 7-ந் தேதி, சித்ரா வேலையை முடித்து, இரவு தாமதமாக வீட்டு வந்தாராம். இதனை அவரது தாயார் கலா கண்டித்து கேட்டுள்ளார்.
இதனால் வேதனையடைந்த சித்ரா, விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.