உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வேம்பார் முதல் ஆலந்தலை வரை நடக்கிறது: பனை விதைகள் நடும் பணியில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் - சமத்துவ மக்கள் கழகம் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

Published On 2023-08-01 08:45 GMT   |   Update On 2023-08-01 08:45 GMT
  • தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் செயற்குழு கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது.
  • தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகத்தினரும், நாடார் பேரவை நிர்வாகிகளும் சமூக அமைப்புகள், பொது மக்களுடன் சேர்ந்து பனை விதைகளை நடுவதற்கு பாடுபட வேண்டும்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் செயற்குழு கூட்டம் தூத்துக்குடியில் நடை பெற்றது. மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் நாடார், பேரவை தெற்கு மாவட்ட தலைவர் அருண் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்

இதில் நாடார் பேரவை பொருளாளர் சுப்பையா, சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட பொருளாளர் லயன் பழனிவேல், பொதுக்குழு உறுப்பினர் ஜோசப், பிரதிநிதி பெரியசாமி, மாவட்ட துணைச் செயலாளர்கள் அந்தோணி சேவியர், அருள்ராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு. முத்துக்குமார், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், மாநகர செயலாளர் உதயசூரியன், மாநகர அவை தலைவர் மதியழகன், காமராஜ், சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவரும், சமத்துவ மக்கள் கழகம் நிறுவன தலைவருமான எர்ணாவூர் நாராயணன் இந்தாண்டு தமிழ்நாட்டின் கடற்கரை மாவட்டங்களில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியினை தொடங்கி இருக்கிறார்கள். அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் ஆலந்தலை வரை சுமார் 160 கிலோமீட்டர் தூரத்திற்கு 15 லட்சம் பனை விதைகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனை தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகத்தினரும், நாடார் பேரவை நிர்வாகிகளும் சமூக அமைப்புகள், பொது மக்களுடன் சேர்ந்து பனை விதைகளை நடுவதற்கு பாடுபட வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் மூலம் பாசன வசதி பெறும் குளங்கள் அனைத்தும் தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் வாழை மற்றும் நெல் பயிர்கள் தண்ணீர் இன்றி வாடுகின்றது.

எனவே தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் தலையிட்டு மேற்கண்ட அணைகளில் இருந்து தண்ணீரை திறந்து விட்டு கருகி நிற்கும் விவசாய பயிர்களை காத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. 

Tags:    

Similar News