உள்ளூர் செய்திகள்

கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் புது வாழ்வு நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

கலெக்டர் அலுவலகம் முன் மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-09-25 16:03 IST   |   Update On 2023-09-25 16:03:00 IST
  • மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடை பெற்றது.
  • மானியத்தை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.

கடலூர்:

கடலூர் கலெக்டர் அலு வலகத்தில் இன்று திங்கட் கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடை பெற்றது. மாவட்டத்தி லிருந்து ஏராளமான பொது மக்கள் தங்கள் கோரிக்கை கள் தொடர்பாக மனு அளித்தனர்.

இந்த நிலையில் மாற்று திறனாளிகள் புது வாழ்வு நல சங்கம் டிசம்பர் 3 இயக்கம் சார்பில் கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் சண்முகம் தலைமையிலும் மாவட்ட செயலாளர் அமரேசன், மாவட்ட பொருளாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் மாற்றத்திறனாளிகள் திரண்டு இருந்தனர். பின்னர் மாற்றுத் திறனாளிகள் நிலம் மற்றும் மனை வாங்குபவர்களுக்கு பத்திரப்பதிவு இலவசமாக செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளிகள் நல அலுவல கத்தின் மூலம் விண்ணப் பிக்கப்படும் வங்கி கடன் மானியத்தை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.

மாற்று திறனாளி கள் வங்கிகளில் கடன் பெற விண்ணப்பிக்கும் போது ஜாமீன் இல்லாமல் கடன் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் உள்ளாட்சித் துறைகளில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் பணி புரியும் ஊழியர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திற னாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்கள் கோரிக்கைகளை வலி யுறுத்தி கோஷமும் எழுப்பி னார்கள். அவர்களிடம் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News