உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் பல்வேறு விதமான வேடமணிந்து போஸ் கொடுப்பதை காணலாம்


இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் ஹாலோவீன் தின கொண்டாட்டம்

Published On 2022-10-30 08:07 GMT   |   Update On 2022-10-30 08:07 GMT
  • லயாள் ஹலோவீன் தின விழிப்புணர்வு குறித்து பேசினார். லோகமித்ரா ஹலோவீன் கதாபாத்திரங்கள் பற்றிப் பேசினார்.
  • மாணவ- மாணவியர் எலும்புக்கூடு பேய், கொம்பு முளைத்த மனிதன் உள்ளிட்ட பல்வேறு முகமூடிகளை அணிந்து ஹலோவீன் தினத்தை கொண்டாடினர்

தென்காசி:

இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் ஹாலோவீன் தின கொண்டாட்டம் நடைபெற்றது. மாணவி ஹரிணி இறைவணக்கம் பாடினார். முத்து ஜனனி வரவேற்றார். நிவேதிகா நிகழ்ச்சித் தொகுப்பு வழங்கினார். அபிநயா செய்தி வாசித்தார்.

லயாள் ஹலோவீன் தின விழிப்புணர்வு குறித்து பேசினார். லோகமித்ரா ஹலோவீன் கதாபாத்திரங்கள் பற்றிப் பேசினார். மணிஷா பூசணிக்காயின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். மாணவ- மாணவியர் எலும்புக்கூடு பேய், கொம்பு முளைத்த மனிதன் உள்ளிட்ட பல்வேறு முகமூடிகளை அணிந்து அனைவரையும் அச்சமூட்டும் வண்ணம் நடித்து ஹலோவீன் தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மைமூன் உறுதிமொழி எடுத்தார்.

மகாலட்சுமி நன்றி கூறினார். பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்தமதி மோகனகிருஷ்ணன், ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குநர் ராதாபிரியா ஆகியோர் ஹாலோவீன் தின கொண்டாட்டத்தில் பங்கேற்றோரை பாராட்டினர்.


Tags:    

Similar News