உள்ளூர் செய்திகள்

ஹஜ் தன்னார்வலர்கள் ஏப்ரல் 13-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு

Published On 2023-03-31 15:35 IST   |   Update On 2023-03-31 15:35:00 IST
  • மும்பையிலுள்ள இந்திய ஹஜ் குழு, ஹஜ் தன்னார்வ தொண்டர்களை தேர்வு செய்வதற்கான சுற்றறிக்கையை இணையதள முகவரியில் வெளியிட்டுள்ளது.
  • ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஆவண நகல்களுடன் ஏப்ரல் 13-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

இந்த ஆண்டு மும்பையிலுள்ள இந்திய ஹஜ் குழு, ஹஜ் தன்னார்வ தொண்டர்களை தேர்வு செய்வதற்கான சுற்றறிக்கையை 'www.hajcommittee.gov.in' என்ற இணையதள முகவரியில் வெளியிட்டுள்ளது. ஹஜ் தன்னார்வ தொண்டராக செல்ல விரும்பும் தகுதியுள்ள நிரந்தர அரசு ஊழியர்கள் மட்டும் www.hajcommittee.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தங்களின் துறை தலைவர் மூலம் உரிய வழியில் அனைத்து ஆவண நகல்களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு ஏப்ரல் 13-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News