உள்ளூர் செய்திகள்
- 27 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
- தொழிலை விட்டு விட்டு வீட்டில் இருந்தார்.
பீளமேடு
கோவை பீளமேடு தொட்டிபாளையம் பிரிவை சேர்ந்தவர் முத்து பெருமாள் (வயது 34), இவர் காளப்பட்டி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மளிகை கடை நடத்தி வந்தார். சமீபத்தில் அவருக்கு ஏற்பட்ட விபத்தில் தனது தொழிலை விட்டு விட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் அவரது வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்வதாக பீளமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரது வீட்டில் சோதனை செய்தபோது 27 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர்.