உள்ளூர் செய்திகள்
பரிசுகளை பள்ளியின் நிறுவனர் வி.எம்.அன்பரசன் வழங்கி பாராட்டினார்.
குந்தாரப்பள்ளி ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா
- பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நடன போட்டி, பேச்சு போட்டி, மாறு வேட போட்டிகள் நடத்தப்பட்டன.
- மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகளை பள்ளியின் நிறுவனர் வி.எம்.அன்பரசன் வழங்கி பாராட்டினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், குந்தாரப்பள்ளியில் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இயங்கி வருகிறது.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நடன போட்டி, பேச்சு போட்டி, மாறு வேட போட்டிகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகளை பள்ளியின் நிறுவனர் வி.எம்.அன்பரசன் வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் சங்கீதா அன்பரசன், சி.பி.எஸ்.இ. பள்ளியின் முதல்வர் ஷர்மிளா, மெட்ரிக் பள்ளியின் முதல்வர் ரமணன், பள்ளி மேலாளர் பூபேஷ்குமார் மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.