மளிகை கடை உரிமையாளர் தூக்குபோட்டு தற்கொலை
- போலீசார் விசாரித்ததில் பழனியம்மாள் வேறுநபருடன் பழக்கம் ஏற்பட்டதால், கணவரை விட்டு அவருடன் சென்றுவிட்டார் என்று தெரியவந்தது.
- மனமுடைந்த காணப்பட்ட சிவக்குமார் நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் தொக்குபோதனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது42). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி பழனியம்மாள் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் பழனியம்மாள் கடந்த 13 நாட்களுக்கு முன்பு திடீரென்று மாயமானார். இதுகுறித்து சிவக்குமார் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்ததில் பழனியம்மாள் வேறுநபருடன் பழக்கம் ஏற்பட்டதால், கணவரை விட்டு அவருடன் சென்றுவிட்டார் என்று தெரியவந்தது.
அப்போது போலீசார் அந்த பெண்ணிடம் கணவருடன் செல்லுமாறு கூறினர். அதற்கு அவர் கணவரை பிரிந்து வாழ்வதாக தெரிவித்தார்.
இதனால் மனமுடைந்த காணப்பட்ட சிவக்குமார் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.