உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் 

தஞ்சையில், நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம்- கலெக்டர் தகவல்

Published On 2022-11-16 10:30 GMT   |   Update On 2022-11-16 10:30 GMT
  • உதவித்தொகை, உதவி உபகரணங்கள் மற்றும் இதர கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம்.
  • ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து மனு அளிக்க வேண்டும்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கு எண் 10 -ல் நாளை (வியாழக்கிழமை ) காலை 11 மணிக்கு மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. அன்றைய கூட்டத்தில் மாற்றுத்தி றனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள் மற்றும் இதர கோரிக்கைகளை மனுக்களாக நேரடியாக அளிக்கலாம். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்கள் அனைத்தும் உதவிகள் வாரியாக சம்பந்தப்பட்ட அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் உதவிகள் வழங்கிட தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனவே, இந்த வாய்ப்பினை அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேற்படி குறைதீர்க்கும் நாளில் மனுக்கள் அளிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்தி றனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகல், இருப்பிடத்திற்கான ஆதாரமாக குடும்ப அட்டையின் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் -1 மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து மனு அளிக்க வேண்டும்.

எனவே தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் நாளை காலை 10 மணிக்குள் நேரில் வந்து மனுக்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண் 04362-236791-ல் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News