உள்ளூர் செய்திகள்

தாண்டிக்குடி ஊராட்சி பட்டலங்காடு கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.

தாண்டிக்குடியில் கிராம சபை கூட்டம்

Published On 2022-10-03 12:26 IST   |   Update On 2022-10-03 12:26:00 IST
  • தாண்டிக்குடி யில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலை மற்றும் தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
  • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டது.

பெரும்பாறை:

கொடைக்கானல் கீழ்மலை தாண்டிக்குடி ஊராட்சி பட்டலங்காட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் மகேஷ் தலைமை தாங்கி னார். கொடைக்கானல் வட்டாட்சியர் முத்துராமன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் கண்ணன் வரவேற்று பேசினர்.

தாண்டிக்குடி கிரா மத்தில் புதிதாக கனரா வங்கி கிளை மற்றும் இ-சேவை மையம் தொடங்க வேண்டும். பி.எஸ்.என்.எல். டவர், அமைக்க வேண்டும். காவல்துறை மற்றும் வருவாய் துறை, மருத்துவ த்துறை அலுவலர்களுக்கும் அரசு சார்பில் குடியிருப்பு கட்டிடம் கட்டித்தர வேண்டும்.

தாண்டிக்குடி யில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலை மற்றும் தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தாண்டிக்குடி மண்டல காபி ஆராய்ச்சி நிலையத்தின் மூலமாக விவசாயிகளுக்காக அரசு வழங்கும் உதவிகளை முறையாக வழங்க வேண்டும்.

மலைப்பகுதி களில் அரசு அனுமதி பெறாமல் இயங்கும் ஆழ்துளை கிணறு அமைக்கும் வாகனம், பொக்லைன் எந்திரங்க ளுக்கு தடை விதிக்க வேண்டும். போக்கு வரத்துக்கு இடையூறாக சாலையில் கிடக்கும் மரங்களை வனத்துறை அதிகாரிகள் அகற்ற வேண்டும் என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டது. ஒன்றிய கவுன்சிலர் தமிழரசி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சமூக ஆர்வலர் கணே ஷ்பாபு நன்றி கூறினார்.

Tags:    

Similar News