உள்ளூர் செய்திகள்
மே தினத்தையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் 526 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
- கிராமசபை கூட்டம் அந்தந்த ஊராட்சி தலைவர்கள் தலைமையில நடைபெற்றது.
- கூட்டத்தில் அமைச்சர் சா.மு.நாசர், ஜெகத்ரட்சகன் எம்.பி., மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான்வர்க்கீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர்:
தொழிலாளர் தினமான மே தினத்தையொட்டி சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் 526 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் அந்தந்த ஊராட்சி தலைவர்கள் தலைமையில நடைபெற்றது.
திருத்தணி அடுத்த கோரமங்கலம் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் சா.மு.நாசர், ஜெகத்ரட்சகன் எம்.பி., மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான்வர்க்கீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது, கிராம வளர்ச்சித் திட்டம், அனைத்துகிராம மறுமலர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.