உள்ளூர் செய்திகள்

5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை ஊட்டி வருகை

Published On 2023-03-06 15:21 IST   |   Update On 2023-03-06 15:21:00 IST
  • கோத்தகிரி, தொட்டபெட்டா வழியாக கார் மூலம் ஊட்டிக்கு செல்கிறார்.
  • தாவரவியல் பூங்கா மேல் பகுதியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் தங்குகிறார்.

ஊட்டி,

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி ஊட்டிக்கு வந்தார். அப்போது அவர் முத்தோரை பாலாடாவில் உள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்தநிலையில் அவர் மீண்டும் 5 நாள் பயணமாக நாளை (7-ந் தேதி) ஊட்டி வருகிறார். இதற்காக சென்னையில் விமானம் மூலம் கோவை வருகிறார்.

இங்கிருந்து மேட்டுப்பாளையம், கோத்தகிரி, தொட்டபெட்டா வழியாக கார் மூலம் ஊட்டிக்கு செல்கிறார். ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மேல் பகுதியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் தங்குகிறார்.

கவர்னர் ரவி வருகிற 12-ந் தேதி வரை இங்கு தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். அதன்பிறகே அவர் சென்னை திரும்ப உள்ளார். அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் குறித்து இதுவரை அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஊட்டியில் தங்கியிருக்கும் அவர் நீலகிரி மாவட்டத்தை ஒட்டிய கேரள பகுதியான வயநாடு மாவட்டத்துக்கும் அவர் செல்ல திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கவர்னர் வருகையை முன்னிட்டு ஊட்டியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டு உள்ளது.  

Tags:    

Similar News